தீபாவளி பண்டிகை - பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு செய்முறை விளக்கம்
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு மத்தாப்பு கொளுத்தும் போது கண்களில் பட்டு சிகிச்சைக்காக கண் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும், தீயணைப்பு துறையினரும், ரோட்டரி சங்கமம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அதில் தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசு, வெடிபொருட்களை பற்றவைப்பது எப்படி? பட்டாசு மற்றும் மத்தாப்பு கொளுத்தும்போது ஏற்படும் திடீர் தீவிபத்தின்போது செய்யவேண்டிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கை என்ன? பண்டிகையின் போது வீடுகளில் தீப்பற்றினால் அணைப்பது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்க நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர்.
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த செய்முறை விளக்க நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே நோக்கம், மற்றநாட்களை காட்டிலும் தீபாவளி சமயத்தில் அதிக அளவு கண்களில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைபெற குவிக்கின்றனர்.
விழிப்புணர்வு நிகழ்வுமூலம் தற்போது பட்டாசு தீ விபத்துக்கள் குறைந்து இருந்தாலும், கண் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்த்தவும் வீடுகளில் தீ விபத்து அசம்பாவிதங்கள் நேரிட்டால் அதனை தடுக்கவும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமாகின்றது என்றும் கண்மருத்துவமனை மருத்துவர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision