ஏழ்மை விமான பயணிகளுக்கு ஒமைக்ரான் பரிசோதனை செலவை அரசே ஏற்கும் - திருச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஏழ்மை விமான பயணிகளுக்கு ஒமைக்ரான் பரிசோதனை செலவை அரசே ஏற்கும் - திருச்சியில் சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருச்சி விமானநிலையத்தில், பன்னாட்டு விமானங்களில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கான ஒமிக்ரான் பரிசோதனை  நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்... ஒமிக்ரான் தொற்றுக்கான அச்சுறுத்தல் இல்லாத வெளிநாடுகளிலிருந்து வரும் 2 சதவீத பயணிகளுக்கு அரசின் செலவில் முற்றிலும் இலவசமாக RTPCR பரிசோதனை செய்யப்படும். ஒமிக்ரான் தொற்றுக்கான அச்சுறுத்தல் உள்ள 11 நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் ரூபாய் 700 கட்டணத்தில் RTPCR பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் தனது ஏழ்மையை குறிப்பிடும் பயணிகளுக்கு பரிசோதனைக்கான செலவை அரசே ஏற்கும். தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்களில் இப்பரிசோதனை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சியை பொறுத்தவரை சிங்கப்பூரிலிருந்து காலை முதல் 2 விமானங்கள் மற்றும் இலங்கை வழியாக 1 விமானமும் வந்துள்ளன. ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து அதிக பயணிகள் வரும் விமான நிலையங்களில் திருச்சியும் ஒன்று. தொற்று பரவாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் 663 பயணிகள் இதுவரை வருகை தந்துள்ளனர். இவர்களின் முகவரிகளை சுகாதார துறை ஆய்வாளர்கள், காவல்துறை மற்றும் வருவாய் துறை ஆகியோர் வசம் ஒப்படைக்கப்படும்.

இப்பயணிகள் ஒரு வார காலம் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகளின் படி வெளியே அனுமதிக்க படுவார்கள். ஒமிக்ரான் நோய் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிரத்யேக வார்டில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தடுப்பூசி போடுவதில் பின் தங்கிய மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn