திருச்சியில் 248.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 524 திடடப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருச்சியில் 248.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 524 திடடப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் விழா நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூபாய் 248.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 524 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து,

106 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூபாய் 99.26 கோடி மதிப்பீட்டில் 6,176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள். 

இந்நிகழ்வில் திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை அருகே உள்ள பழங்குடியின மாணவர்கள் பயிலும் உண்டு உறைவிடப்பள்ளியில் படித்து வந்த 18 வயதான ரோகிணி, கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) 73.8 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று என்.ஐ.டியில் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் அவருக்கு அமைச்சர்கள் பொன்னாடை போற்றி கேடையம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார்,

எம்.பழனியாண்டி, எஸ்.இனிகோ இருதயராஜ், ப.அப்துல் சமது, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.தேவநாதன், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision