பட்டப்பகலில் முதியவரை கழுத்தை நெரித்து நடுரோட்டில் பணம் பறிப்பு

பட்டப்பகலில் முதியவரை கழுத்தை நெரித்து நடுரோட்டில் பணம் பறிப்பு

காந்தி மார்க்கெட் பகுதியில் தனியாக நடந்து சென்ற முதியவரை மூன்று சிறுவர்கள் தாக்கி பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரில் சமீப காலமாக சிறுவர்கள் குற்ற செயலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள சப்ஜெயில் ரோட்டில் கடந்த 4ம் தேதி மாலை 3 மணிக்கு முதியவர் ஒருவர் தனியே நடந்து சென்றார்.பின் தொடர்ந்து வந்த மூன்று சிறுவர்கள் முதியவரை சுற்றி வளைத்து தாக்கி கீழே தள்ளி விடுகின்றனர். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பறித்து செல்கின்றனர். இச்சம்பவம் சம்பவம் அப்பகுதி கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில்

பதிவாகியுள்ளன. இந்தக் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மாநகரில் கஞ்சா போதை ஊசி மாத்திரை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள சிறுவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக்கி உள்ளது. ஒரு கட்டத்தில் போதை பொருட்கள் வாங்க பணம் கிடைக்காதவர்கள் இதுபோன்று வழிபறி

சம்பவங்கள் ஈடுபடுகின்றனர்.இதை பார்த்து யாராவது கண்டித்தாலோ தட்டிக் கேட்டாலோ அவர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது இதனால் பார்ப்பவர்களுக்கும் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.எனவே போலீசார் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தொடர் கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உடனடியாக குற்றச்செயலில் ஈடுபடும் சிறார்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போதையில் சிறார்கள் தங்களுடைய எதிர்காலத்தை அளித்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை

உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision