அன்பில் பேரனுக்கு வந்த என்ன கொடுமை இது- அமைச்சர் பேட்டி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் ,அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான அதிகாரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் கூட்டத்தில் தெரிவித்தார்.
பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது... தமிழகத்தில் 2500 பள்ளிகள் மரத்தடியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையில் உள்ளது. புதிய கட்டிடங்கள், வகுப்பறைகள் மதில் சுவர்கள் ஆகியவற்றிற்கு 1700 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதிகள் வந்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும். அன்பில் மகேஸ் குறித்து டீவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது குறித்த கேள்விக்கு அன்பில் பேரனுக்கு வந்த என்ன கொடுமை என நினைத்து கொண்டேன். பெரியாரின் செல்லப் பிள்ளையாக பாராட்டப்பட்டவர் அன்பில் அவருடைய செல்லப்பிள்ளை பேரன் நான். என்னை விமர்சித்தவர்களையும் என்னை ஆதரித்தவர்களும் எனக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.
கல்வி தொலைக்காட்சியின் இரண்டாவது அலைவரிசை துவங்குவதற்கு தலைமை செயல்அதிகாரி நியமனத்திற்க்கு முறையாக அதற்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அவரை தேர்வு செய்தனர் .அவரின் பின்புலம் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வருவதால் தற்பொழுது என்னையும் சேர்த்து விமர்சனங்கள் வருவதால் அதனை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளேன்.
தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளது போல் எதிலும் சமரசம் இல்லை என்ற இயக்கம். அவருடைய வளர்ப்பு இயக்கமும் நானும் ஏமாந்து விடமாட்டோம் என்றார். எல்கேஜி, யுகேஜி மாணவர்களை சேர்ப்பதற்கு 2381 பள்ளிகள் உள்ளது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று பள்ளிக் கல்வித் துறை இதனை நடத்தி வருகிறது. கூடுதல் சுமையாக இருந்தாலும் இதற்கு உரிய ஆசிரியர்களின் நியமித்து கல்வி கற்றல் தொடரும் என்றார்.
பள்ளிகளில் தமிழ் வழி ,ஆங்கில வழி மாணவர்கள் ஒன்றாக பாடம் எடுப்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு தாய்மொழி கற்றல் மிக அவசியம். இதற்காக ஆசிரியர்களுக்கு 25 நாட்கள் வருடத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
புதிய ஆசிரியர்கள் 2500 பேர் தேர்வு சான்றிதழ் சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். மேலும் ஆசிரியர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்கள். அவர்களுக்கான டெட் தேர்வு அனைத்தும் முறைப்படி நடத்தி பணியில் அமர்த்தப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
ஆயிரம் ரூபாய் உதவி தொகை திட்டம் வருடத்திற்கு 6 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அதன் பிறகு முதல்வர் இடம் தெரிவித்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும் பயன்பெற அவர் முடிவெடுப்பார் என்றார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO