திருச்சியில் இருந்து 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
(14.04.2023) முதல் (16.04.2023) வரை தமிழ் புத்தாண்டு மற்றும் சனி ஞாயிறு என தொடர் விடுமுறையையொட்டி (13.04.2023) மாலை முதல் (15.04.2023) வரை சென்னை, திருப்பூர், கோவை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி,
புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம், காரைக்குடி மற்றும் சிவகங்கை போன்ற ஊர்களுக்கு பயணிகள் பயன்பெறும் வகையில் 250 கூடுதல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட். கும்பகோணம் மூலம் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் (13.04.2023) முதல் (15.04.2023) வரை 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதே போன்று தொடர் விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல (16.04.2023) & (17.04.2023) ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பேருந்துகள் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் கூடுதல் அலுவலர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூடுதல் சிறப்பு பேருந்து வசதியிதிருச்சியில் இருந்து 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம் (14.04.2023) முதல் (16.04.2023) வரை தமிழ் புத்தாண்டு மற்றும் சனி ஞாயிறு என தொடர் விடுமுறையையொட்டி (13.04.2023) மாலை முதல் (15.04.2023) வரை சென்னை, திருப்பூர், கோவை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சி, கும்பகோணம்,
தஞ்சாவூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, புதுக்கோட்டை, கரூர், ராமநாதபுரம், காரைக்குடி மற்றும் சிவகங்கை போன்ற ஊர்களுக்கு பயணிகள் பயன்பெறும் வகையில் 250 கூடுதல் சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட். கும்பகோணம் மூலம் இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், மதுரை, கும்பகோணம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி மற்றும் கரூர் ஆகிய ஊர்களுக்கு இரு மார்க்கங்களிலும் (13.04.2023) முதல் (15.04.2023) வரை 50 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதே போன்று தொடர் விடுமுறை முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல (16.04.2023) & (17.04.2023) ஆகிய நாட்களில் 300 கூடுதல் சிறப்பு பேருந்துகள் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் கூடுதல் அலுவலர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு போக்குவரத்து இயக்கத்தை சீரமைக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுதல் சிறப்பு பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்ப)லிட், மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.