இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இரண்டாம் கட்ட முகாம்

இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இரண்டாம் கட்ட முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி (01.01.2024)-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (27.10.2023) முதல் (05.01.2024) வரை நடைபெற ;று வருகிறது. இச்சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் ஒரு பகுதியாக வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி இரண்டாம் கட்டடமாக (25.11.2023) மற்றும் (26.11.2023) ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும், நிர்ணயிக்கப்பட்ட 2547 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெறவுள்ளது. 

வாக்காளர்கள் இச்சிறப்பு முகாம்களில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், இதுவரை வாக்காளர் பட்டியல் இடம்பெறாத நபர்கள் குறிப்பாக இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட புதியதாக விண்ணப்பங்கள் தாக்கல் செய்திடலாம். ஏற்கனவே வாக்காளர்களாக தங்களது பெயரை பதிவு செய்துள்ளவர்கள் தங்களது பெயர், வயது மற்றும் முகவரி திருத்தம் செய்திட விண்ணப்பங்கள் அளித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதுதவிர, வாக்காளர்கள் voters.eci.gov.in என்ற இணையதளத்திலும், Voters Helpline என்ற App-ஐ பயன்படுத்தியும் வாக்காளர்கள் இச்சேவைகளை பயன்படுத்திக்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.  எனவே வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision