திருச்சி பொன்மலை தேசிய நெடுஞ்சாலை பாலம் சேதம் - கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு எதுவாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக செல்வதற்கு நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டு தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் ரயில் தண்டவாளம் செல்வதால் அங்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை ஜி கார்னர் மேம்பாலம் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கற்கள் சரிந்து விழுந்து உள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேதம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக நிபுணர்கள் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து இந்த பாலத்தின் வழியாக கன செல்வதற்கு போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளார்.
தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்து இன்று மாலைக்கு பிறகு அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். அதன் பின்னர் இதன் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் வந்து இந்தப் பாலத்தில் கீழ்பகுதியில் கற்கள் பெயர்ந்த இடத்தை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மேம்பாலம் கீழ்பகுதியில் சேதமடைந்த பகுதியை சரி செய்யும் பணி மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், போக்குவரத்து துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் இருந்தும் திருச்சியில் இருந்தும் சென்னைக்கு செல்லக்கூடிய முக்கியமான பாதையாக இருந்த இந்த மேம்பாலம், தற்பொழுது சேதம் அடைந்துள்ளதால் எதிர் திசையில் உள்ள சாலை வழியாக வாகனங்கள் செல்ல இருவழிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பொங்கல் பண்டிகை மட்டும் தொடர் விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லக்கூடிய மக்கள் அதிக அளவு திருச்சி வழியாக கடந்து செல்வார்கள். இந்த மேம்பாலம் சேதமடைந்ததால் ஒரு வழிப்பாதை இருவழிப்பாதை பாதையாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வதற்கான அறிவிப்பை அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision