உத்தரபிரதேச போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் மற்றும் செய்தியாளர் அஸ்திக்கு திருச்சியில் அஞ்சலி

உத்தரபிரதேச போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் மற்றும் செய்தியாளர் அஸ்திக்கு திருச்சியில் அஞ்சலி

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய அமைச்சரின் மகன் கார் மோதி 4 விவசாயிகள் மற்றும் துப்பாக்கி சூட்டில் பத்திரிக்கையாளர் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தியானது கடந்த 23ஆம் தேதி சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் விவசாய சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உயிர்நீத்த விவசாயிகளின் அஸ்தி ஆனது இன்று திருச்சி கொண்டு வரப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் நடந்த அஸ்தி வீரவணக்க நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஸ்திக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வீரவணக்கம் முழக்கம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அஸ்தியானது தஞ்சை கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் இன்று இரவு வேதாரணியத்தில் கடலில் கரைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn