மலையடிப்பட்டி தூய தோமையார் திருவிழா – பெரிய தேரோட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் அமைந்துள்ள தூய தோமையார் ஆலயத்தில் கடந்த ஏப்ரல் 13- ஆம் தேதி வியாழக்கிழமை ஆண்டவரின் இயேசுவின் பாடுகளின் பாஸ்காவுடன் தொடங்கிய தூய தோமையார் திருவிழா வெள்ளிக்கிழமை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா, சனிக்கிழமை உயிர்த்த ஆண்டவர் தூய தோமையார் சந்திப்பு மற்றும் தேர் பவணி என நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் தூய தோமையார் ஆலயத்தில் திருச்சி மறை மாவட்ட குருகுல முதல்வர் எல்.அந்துவான் நடத்திய சிறப்பு திருப்பலிக்கு பின் மாலையில் தேரடியிலிருந்து உயிர்த்த ஆண்டவர் உற்சவம் கொண்ட பெரிய தேர் ஊர்வலம் புறப்பட்டது.
எம்.எல்.ஏ அப்துல் சமது தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். பெரிய தேர் மலையடிப்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக பவணி வந்தது. தேரின் மீது பொட்டுக்கடலை தூவி பொதுமக்கள் தேரை வரவேற்றனர் நகர் உலா வந்த பெரிய தேர் மீண்டும் தேரடிக்கு வந்து நிலைகொண்டது.
இந்நிகழ்ச்சியில் மலையடிப்பட்டி பங்கு சார்ந்த 18 பட்டி கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தேரோட்டத்திற்கு பிறகு மலை மேல் உள்ள தூய தோமையார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, பிராத்தினைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை மலையடிப்பட்டி தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn