தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா  நடைபெற்றது.

மணப்பாறையில் நகர திமுக சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்- பள்ளி கல்வித் துறை அமைச்சர் பங்கேற்பு.

மணப்பாறை ஏப் - 17 நகர திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் விராலிமலை சாலையில் உள்ள தனியர மண்டபத்தில் நடைபெற்றது. 

திமுக நகர செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மு.ம.செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், எஸ்.ஜான்பிரிட்டோ, துரை காசிநாதன், பி.கண்ணன், ஆர்.பிச்சையம்மாள், டி.ஜேம்ஸ், டி.பால்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பகுத்தறிவு பாசறை என்ற தலைப்பில் வே.அமதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது, திமுக மாவட்ட அவைத்தலைவர் என்.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் சி.ராமசாமி  சி.செல்வராஜ், அ.சின்னஅடைக்கன் ஆர்.ஸ்ரீரங்கன், வி.ஏ.ராஜேந்திரன் ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 நிகழ்வில் நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் பி.கிருஷ்ணகோபால் ஆகியோர் வரவேற்புரையும், மாவட்ட பிரதிநிதி பி.பால்பாண்டி எம்.நிஜாமுதீன் ஆகியோர் நன்றியுரையும் கூறினர்.