திருச்சி எம்.பி உள்ளிட்ட 244 நபர்கள் மீது வழக்கு பதிவு
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி, அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக சுமார் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக கூடியிருந்த நிலையில் திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன முழக்கமிட்டனர்.
பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட முன்வந்த போது காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்ற திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்
இதனையடுத்து, ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உள்பட 244 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn