அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சவால்

அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சவால்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா  நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் மற்றும் நம்பர் ஒன் முதல் முதலமைச்சர் என இரண்டு வருடத்தில் இவ்வளவு பெரிய பெயர் பெற்ற முதல்வருக்கு தான் நான் பிறந்த நாள் கொண்டாடி வருகிறோம்.

கடந்த 10 வருடமாகதமிழகத்தை ஆண்டவர்கள் பாலைவனமாக விட்டு சென்று விட்டனர். அந்த பாலைவனத்தை பதப்படுத்தி, பன்படுத்தி நாட்டின் வளர்ச்சி என்ற விளைச்சலை தந்து நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயர் வாங்கி உள்ளார் என வடநாட்டு பத்திரிகை கூட  தமிழ் மாநிலம் தான் நம்பர் ஒன்மாநிலம், நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் தான் என்று பாராட்டுகிறது.

ஒரு கட்சியின் மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார். அது பழைய படங்களில் வரும் ஜோக் போல் ஒருவர் ஆயிரம் மற்றவர் 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் பில்லிகா பிஸ்கோத் என்று கூறுவான் அதுபோல் சொல்லி இருக்கார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொத்து மதிப்பு 1023 கோடி அதை நிரூபிக்கவில்லை என்றால் 500 கோடி அபராதம் தர வேண்டும் என தலைமை கழகத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டரை லட்சத்திற்கு அந்த பணத்தை வைத்து புத்தகம் (நூல்கள்) வாங்கிகொடுக்கிறேன் நல்லது எது கெட்டது என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் உள்ள நல்ல புத்தகத்தை நான் வாங்கித் தருகிறேன். அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களின் பெற்றோர்களாக இருந்தாலும் அவர்கள் புரிந்து கொள்ளட்டும் அவர் கூறியது எவ்வளவு பெரிய டுபாக்கூர் எனஅவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்

மக்களை திசை திருப்புவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் கூறுகிறார். திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்கள் எல்லோரையும் கலைஞரின் மகன் ஒன்றிணைத்து வருகிறாரே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் சொன்னால் 100 பேரில் 10 பேராவது நம்ப மாட்டானா என்று அரசியல் செய்கிறார். முதல்வர் ஒன்றுதான் கூறினார் இது போன்று விமர்சனம் வதந்தி பரப்புபவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம். மக்களுக்காக பணியாற்றும் வேலையை அமைச்சர்கள் பார்க்க வேண்டும் இதுபோன்ற காமெடியனுக்கு எல்லாம் பதில் சொல்லும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும் என தமிழக முழுவதும் சுற்றி வருவதாகவும் மேலும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆகியவற்றில் பயிலும் ஒன்றரை கோடி பிள்ளைகளுக்கு நான் தான் பொறுப்பு இந்த பொறுப்பை எனக்கு வழங்குவதற்கு காரணமாக இருந்தது எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த நீங்கள் தான் தமிழகத்தில் என்னை எங்கு பாராட்டினாலும் அதற்கு உரியவர்கள் நீங்கள் தான். திருவெறும்பூர் ஒன்றியம் அரசியல் ரீதியாக இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தாலும், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 கோடியே26 லட்சத்து 82 ஆயிரத்து 900 மதிப்பிலான வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல் ரூ 4 கோடியே 63 லட்சத்து  10 ஆயிரத்து 613 மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் மே மாதம் முதல் வாரத்தில் திருவெறும்பூர் சேட்டிலைட் சிட்டியிலிருந்து பர்மா காலனி கரை ரோடு  ரூ 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் போடுவதற்கு உரிய பணி தொடங்கப்படுகிறது. கும்பகுடியிலிருந்து புதுக்கோட்டை சாலை வரை ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட உள்ளது. பூலாங்குடி மெயின் ரோடு 54 லட்சத்திலும் நடைப்பெற இருக்கிறது. 2023 மற்றும் 2024 தூர் வாரும் பணிகள் சோழமாதேவியில் இருந்து திருவெறும்பூர் வரை இரண்டு விதமான பணிகள் 24 லட்சத்தி 80 ஆயிரம் மற்றும் 19 லட்சம் என இரண்டு பணிகள் கிழக்குச்சியில் இருந்து திருவெறும்பூர், கும்ப குடியிலிருந்து குண்டூர், பூலாங்குடியில் இருந்து பழங்கனான்குடி,

தேனிப்பட்டிகளில் இருந்து அசூர், அசூரில் இருந்து துவாக்குடி சூரியூரில் இருந்து கும்பக்குடி எனஒரு கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி நடைபெற உள்ளது. இந்த மேடையில் அமர்ந்திருக்கும் உள்ளாட்சி பிரதிநிதி பொறுப்புகள் மற்றும் அமைச்சர் எங்களது பொறுப்பு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் நாங்கல் ஒழுங்காக பணி செய்தால் இந்த இடத்தில் இருப்போம் இல்லை என்றால் நீங்கள் தூக்கி எறிவீர்கள். தமிழக முதல்வர் சொல்வது ஒன்றுதான் நமக்கு வாக்களித்த மக்கள் எந்த நம்பிக்கையில் வாக்களித்தார்கள் நீங்கள் கொடுத்த 505 வாக்குறுதிகள்.

80 சதவீதம்நிறைவேற்றி விட்டோம் என்ற தைரியத்தில் தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக்,முன்னாள் எம்எல்ஏ சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn