தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களை தகாத வார்த்தையில் திட்டி, சாதிப்பெயரை சொல்லி திட்டி தரக்குறைவாக நடத்தி வரும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரியினை கண்டித்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்களும், 37 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த பணியாளர்களை வேலை பிரித்துக் கொடுத்து துப்புரவு பணியாளர்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பணியில்

சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளராக புவனேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி முசிறி பேரூராட்சியில் பணியாற்றி தற்போது மாறுதலாகி சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி க்கு சுகாதார ஆய்வாளராக பணியிடை மாற்றம் செய்து வேலை செய்து வருகிறார்.

இப்பேரூராட்சியில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களிடம் எந்த வேலைக்கு எந்தெந்த பணியாளர்களை நியமித்து வேலை வாங்க வேண்டும் என்ற நிர்வாகத் திறமை இல்லாத காரணத்தினால் அன்மையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேரோட்ட விழா, இம்மாதம் 5 ம் தேதி சமயபுரம் ஆட்டு வாரச்சந்தையில் நடைபெற்ற வணிகர்கள் சங்க மாநில மாநாடு போன்றவற்றில் குவிந்த குப்பைகளை அல்லாமல் சுகாதாரம் இன்றி காணப்பட்டது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மற்றம் துப்புரவு பணியாளர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. சுகாதாரம் ஆய்வாளர் துப்புரவு பணியாளர்கள் இடையே இரு பிரிவாக ஏற்படுத்தி சுகாதாரப் பணியாளர்கள் இடையே விரோதப் போக்கினை ஏற்படுத்தினார். இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் வருகைப்பதிவேடு பேரூராட்சி துப்புரவு சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி நடத்தினார்.

இன்று காலை வருகை பதிவேடு எடுக்கும்போது துப்புரவு பணியாளர்களை சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி ச்சீ, வா, போ, நாயே என ஒருமையில் பேசியும் , சாதிப் பேரை சொல்லித் திட்டியதனை எதிர்த்து கேட்ட சுகாதாரப் பணியாளர்களை சாதிப்பெயரை சொல்லி திட்டியதால் கோபமடைந்த சுகாதார பணியாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதின் பேரில் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO