16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு, இன்று புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா, மூலவர் விநாயகர்,மூலவர் ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன், பரிவார தெய்வங்கள். காவேரி ஆற்றிலிருந்து, அழகர் மலை மற்றும் புண்ணிய ஸ்தலங்களில் இருந்து தீர்த்த குடம் எடுத்தல், முகூர்த்தக்கால் ஊன்றுதல், முளைப்பாரி இடுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கிய மஹா கும்பாபிஷேக விழாவில், இன்று மங்கள் இசையுடன் முதற்கால யாகபூஜை தொடங்கியது. மாலையில், ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப அலங்காரம், திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை, நான்காம்கால பூஜையாக கணபதி ஹோமம், கோ பூஜை, உயிர் ஊட்டல், கண் திறப்பு, நாடி சந்தானம், கோபூஜை, நான்கு நிலை வாசல் பூஜை தீபாராதனை முடிந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. கடங்கள் மூலவர் விமானம் வந்தடைந்தது. அங்கு சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் மூலவர் விமானம் புனித நீர் ஊற்றப்பட்டு புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பரிவார தெய்வங்கள் ஸ்ரீ விநாயகர், மற்றும் நான்கு திசை கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. பின் மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம், மஹா தீபாராதனைகள் நடைபெற்று மூலவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் RVS வீரமணி குடும்பத்தினர்.இந்து அறநிலைத்துறை வினோத் குமார் செயல் அலுவலர் அன்பழகன் ஆய்வாளர் வினோத்குமார்,எடத்தெரு,மணப்பாறைபட்டி,கார மேட்டுப்பட்டி,நாட்டாமைகள், மற்றும் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மலைக்கோட்டை ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision