சர்க்காரியா கமிஷனில் ஊழல் செய்த திமுக கோவில் நகைகளை உருக்கி கொள்ளையடிக்க முயற்சி - இந்து முன்னணி அமைப்பினர் குற்றச்சாட்டு

சர்க்காரியா கமிஷனில் ஊழல் செய்த திமுக கோவில் நகைகளை உருக்கி கொள்ளையடிக்க முயற்சி - இந்து முன்னணி அமைப்பினர் குற்றச்சாட்டு

அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் பக்தர்கள் அளித்த காணிக்கையாக பெறப்பட்ட நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்ய முடிவுசெய்துள்ள தமிழக அரசின் முடிவைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக திருச்சி அண்ணாசிலை அருகில் இந்து முன்னனி மாவட்ட தலைவர் மனோஜ்குமார் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி திமுக அரசின் இத்தகைய செயலைக் கண்டித்தும், அறநிலையத்துறையை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டண கோஷமிட்டனர்.

இதனையடுத்து இந்து முன்னணி, திருச்சி கோட்டசெயலாளர், போஜராஜன் பேட்டியளிக்கையில்.... சர்க்காரியா கமிஷனுக்குத் தெரியாமலேயே நூதனதிருட்டில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் தான் தற்போது முதல்வராக உள்ள நிலையில், கோவில் நகைகளை உருக்கினால் பலகோடி கொள்ளையடிப்பார்கள்.

கோவில்களில் உள்ள தங்கம், வெள்ளி நகைகளின் விபரம் கணக்கு வழக்குகள் தெரியாதபட்சத்தில், விலைமதிக்க முடியாதபொருட்களை அபகரிக்க முயலும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், மாற்று மத வழிபாட்டுதலங்களை கையில் வைத்திருக்காத அரசு இந்து கோவில்களிலிருந்து வெளியேற வேண்டும், தங்கநகை உருக்கும் திட்டத்தினை கைவிடாவிட்டால் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn