இளைஞர்கள் நினைப்பதை சாதிப்பேன் - பெரம்பலூர் திமுக வேட்பாளர் பேட்டி

இளைஞர்கள் நினைப்பதை சாதிப்பேன் - பெரம்பலூர் திமுக வேட்பாளர் பேட்டி

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அருண் திருச்சி வந்தார். அவருக்கு சமயபுரம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்.... மத்திய அரசு தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து, பொறாமை பட்டு பலவற்றை செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் உரிமையை காக்கவும், தமிழகத்திற்கு வர வேண்டிய எல்லா வளங்களை பெறுவதற்குமான தேர்தல்.

இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ள இந்த தேர்தலில் இளைஞர்கள் சார்பில் போட்டியிடுவதில் பெருமை அடைகிறேன். 40 தொகுதிகளிலும் தலைவரை போட்டியிடுவதாக கருதி இளைஞர்கள் நினைப்பதை நான் சாதிப்பேன். இன்று அல்லது நாளை எந்தெந்த தொகுதியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது விவரமாக தெரிவிக்கப்படும். தேர்தலில் வெற்றி பெற்ற பின் பெரம்பலூரில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கான திட்டங்களும் நாளை அறிவிக்கப்படும். மக்களின் தேவைகளை கருதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை என்பதால் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். இந்த தேர்தலிலும் தேர்தல் அறிக்கை தலைவர் தான் ஹீரோ. இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision