சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பாதிப்பு - 20 பேர் மீது வழக்கு பதிவு - 3 பேர் கைது

சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பாதிப்பு - 20 பேர் மீது வழக்கு பதிவு - 3 பேர் கைது

வரும் 2026 வது ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய, பகுதி, நகர அளவில் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் தலைமையில் திருவெறும்பூர் கூத்தைப் பார் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அதிமுக அமைப்புச் செயலாளர் மனோகரனை வரவேற்பதற்காக திருவெறும்பூர் கூத்தைப் பார் பிரிவு சாலை அருகே கட் அவுட் பிளக்ஸ் பேனர்களும் கொடி கம்பங்களும் நட்டு இருந்ததோடு வெடி வைத்தனர்.

அப்படி அவர்கள் வைத்த வெடி அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் பட்டது. இதில் காயமடைந்த சுப்பிரமணியனை திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுப்பிரமணியனின் கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் சுப்பிரமணியன் கண் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த தகவல் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக்கு இருவரும் உடனடியாக சுப்பிரமணியனுக்கு உயர் சிகிச்சை அளிக்க மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற (அரவிந்த்) தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த பிரச்சனை சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் கொறாடாவுமான மனோகரன், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, வெடிவைத்த ராஜா உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வெடிவைத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ராஜா (36) அதே பகுதியை சேர்ந்த அவனது நண்பன் ராகவன் (36) வடக்கு காட்டூர் பாத்திமா படத்தை சேர்ந்த முகமது ரபிக் ஆகிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision