திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடத்தும் தெருவோர வியாபாரிகளின் உறுப்பினர் தேர்தல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடத்தும் தெருவோர வியாபாரிகளின் உறுப்பினர் தேர்தல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நடத்தும் தெருவோர வியாபாரிகளின் நகர விற்பனை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் வியாபாரிகள் உரிமைகளை பெற்றுத்தர போராடும் உறுதி கொண்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால்

வியாபாரிகள் உரிமைகளுக்காக போராடிவரும் AITUC CITU போன்ற தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதால் தரைக்கடை வியாபாரிகள் தங்கள் வாக்குகளை நமது தரைக்கடை வியாபாரிகளின் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக போட்டியிடும் உறுப்பினர்களுக்கு முத்திரை இட்டு வாக்களித்து வெற்றி பெற செய்யும்மாறு கேட்டுக்கொள்கிறோம்.

தரைக் கடை வியாபாரிகளின் நீண்டகாலமாக வியாபாரம் செய்யும் இடங்களில் நிரந்தர வியாபாரம் செய்ய, வியாபாரம் மண்டலமாக மாநகராட்சி நிர்வாகத்தை அறிவிக்க செய்வது,  மருத்துவ காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு பெற்று தருவது,தரைக்கடை வியாபாரிகளுக்கு ரூபாய் 50,000 முதல் ரூபாய் 5 லட்சம் வரை வட்டி இல்லாத கடன் உதவி பெற்று தருவது, வியாபாரிகளின் இலவச வீட்டுமனை பெற்றுத் தருவது,

வியாபாரிகளுக்கு அமைப்பு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற்று தருவது, ஸ்ரீரங்கம் பகுதிகளில் கார் பார்க்கிங் அமைத்து வியாபாரிகளின் உரிமை நிலை நாட்டுவது போன்ற கூட்டமைப்பு சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர் தேர்தல் நாள் 30/5/2025 நேரம் காலை 10 மணி முதல் 6 மணி வரை பிஷப் கீப்பர் மேல்நிலைப்பள்ளி புத்தூர் நடைபெற உள்ளது கீழ்க்கண்டவர்கள் திருச்சி மாநகராட்சி தெருவோர வியாபார நகர விற்பனை குழு தேர்தலில் போட்டியிட உள்ளனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision