இன்று திருச்சி இரயில் நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

திருபாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணிகள் காரணமாக, ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று (25.05.2025) காலை 08.35 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும் ரயில் எண் 76820, திருச்சிராப்பள்ளி-காரைக்கால் DEMU பயணிகள் ரயில் திருவாரூர் மற்றும் காரைக்கால் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இன்று (25.05.2025) பிற்பகல் 2.55 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும் ரயில் எண் 76819, காரைக்கால்-திருச்சிராப்பள்ளி DEMU காரைக்கால் மற்றும் திருவாரூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் நேரத்தில் திருவாரூரில் இருந்து மட்டுமே பயணத்தைத் தொடங்கும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision