மூன்று குழந்தைகளுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்

மூன்று குழந்தைகளுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்

திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த பெண் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மூன்று குழந்தைகளுடன் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் :- எனது பெயர் அபினயா எனது கணவர் பெயர் மாரியப்பன்.எனது கணவரை நான் கலப்பு திருமணம் செய்துக்கொண்டேன்.

எங்களுக்கு திருமணமாகி, 9 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு எந்தவித ஆதரவும் கிடையாது நான் 9 ஆண்டுகள் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. நான் B.Sc (Chemistry) பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனது கணவர் இரத்த புற்று நோயினால் இறந்து விட்டார். இவரின் இறப்பிற்குபிறகு எனக்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை.

எனவே கலப்பு திருமணம் செய்து கொண்டதால் அரசுத்துறையில் ஏதாவது ஒரு வேலை மற்றும் இரத்த புற்றுநோயால் இறந்த என் கணவர் மரணத்திற்கும் நிதி உதவிவழங்கிட பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அம்மனுவில் தெரிவித்து இருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மூன்று குழந்தைகளுடன் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை கண் கலங்கச்செய்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision