இந்தி திணிப்பை எதிர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் மக்களிடையே துண்டு பிரசுரம்

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்குதல்.ஒன்றியத்தில் ஆளூம் மோடி அரசனது தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் அந்த நிதியை வழங்குவோம் என்றும் மேலும் இந்தி மொழியை கட்டாய மொழியாக வேண்டும் என்று தமிழக அரசை கட்டாயப்படுத்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்
திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கிழக்கு மாநகரம் சார்பில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன் தலைமையில் பொதுமக்களிடையே தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, காட்டூர் கடைவீதிகள் மற்றும் திருவெறும்பூர் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
மேலும் அப்பொழுது ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் திருவெறும்பூர் பகுதி செயலாளர் சிவக்குமார் மாநகர மாநகரப் பொருளாளர் தமிழ்ச்செல்வன் மாநகர துணை செயலாளர் பொன் செல்லையா பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கே. கார்த்தி அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision