வட மாநில தொழிலாளர்கள் மீது திருச்சியில் தாக்குதல் - குற்றவாளிகளை தேடும் காவல்துறை
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில் சிவன் கோவில் அருகில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வட மாநில இளைஞர்கள் ஆறு பேர் வாடகைக்கு அறைஎடுத்து கூலி வேலை செய்து வருகின்றனர். மதியம் வேலைக்கு செல்லாமல் ஓய்வெடுத்த நிலையில், திடீரென அவர்களது அறைக்குள் புகுந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல், தூங்கிக் கொண்டிருந்த வட மாநில இளைஞர்களை கட்டையாலும், ஆயுதங்களாலும் கொடூரமாக தாக்கியது.
இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில் ( 36 ), நரேஷ் ( 32 ), ராகுல் ( 23 ) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள வர்துன்னா ( 24 ), ராஜேஷ் ( 29 ), மலேஷ் ( 18 ) ஆகிய 6 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்த ஏழை கூலி தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்து திருச்சி ஜம்புனாதபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் திருத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்த இளமுருகு, குபேந்திரன், ஜீவா, சூரிய பிரகாஷ், ஜெயக்குமார் ஆகிய ஐந்து பேரும், கண்ணனூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். பின்னர் மது வாங்கி வந்து வட மாநிலத்தவர் தங்கி இருந்த வீட்டின் முன் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
இதனை தட்டிக்கேட்ட வடமாநிலத்தவர் மீது பூரி தேய்க்கும் மரக்கட்டையை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு தலையில் தலா நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision