100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன்!!

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன்!!

Advertisement

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி மாவட்டம், 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ராட்சத பலூன் ஒன்றை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி இன்று (02.04.2021) பறக்கவிட்டார்.

Advertisement

அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)செல்வி ஜெ.ஜெயப்பிரித்தா ஆகியோர் உடன் உள்ளனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm