திருச்சி அரசு பள்ளியில் சேர்க்கை - பெற்றோர்கள் ஆர்வம்

திருச்சி அரசு பள்ளியில் சேர்க்கை - பெற்றோர்கள் ஆர்வம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று (17.04.2023) தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திருச்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மிகவும் ஆர்வமுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வந்திருந்தனர்.

திருச்சி புத்தூர் ,ஸ்ரீரங்கம், எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்து பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் வரிசையில் அமர்ந்திருக்கும் காட்சி காண முடிந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் சேர்ப்பவர்களுக்கான முக்கிய சலுகைகள் குறித்து ஏற்கனவே துண்டு பிரசுரங்கள் வெளியிட்டுள்ளது .

திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வந்திருந்த பெற்றோர் தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், தங்களால் கட்ட முடியாத காரணத்தினால் அரசு பள்ளிகளில் கட்டணம் இல்லை.

மேலும் இந்த பகுதியில் கணிப்பொறி மற்றும் குளிர்சாத வசதியுடன் வகுப்பறைகள் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் என அனைத்தும் சிறப்பாக கற்றுத் தருவதால் தனது குழந்தையை இப்பள்ளியில் சேர்க்க வந்ததாக தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn