திருச்சி மாநகரில் 2 இடங்களில் உயர்மட்ட சாலை அமைச்சர் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குப் பிறகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் புதிய அறிவிப்புகள் அமைச்சர் வெளியிட்டர்.
இதில் திருச்சி நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் பகுதியில் இருந்து காந்தி சிலை, முத்தரையர் சிலை வழியாக நீதிமன்றம் ரவுண்டானா வரையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
மேலும் ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை மற்றும் கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாட்சிபுரம் வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார். தற்போது திருச்சியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு திருச்சி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn