குற்றவாளிகளின் சரித்திர பதிவேட்டில் 184 பேர் கண்காணிப்பு - திருச்சி முதலிடம்

குற்றவாளிகளின் சரித்திர பதிவேட்டில் 184 பேர் கண்காணிப்பு - திருச்சி முதலிடம்

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் 29 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது IPC மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபட்டுள்ள 184 குற்றவாளிகளின் நடத்தையை கண்காணிக்கும் பொருட்டு சரித்திர பதிவேடுகள் துவங்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா 46 குற்றவாளிகள் மீதும், அரியலூர் மாவட்டத்தில் 35 குற்றவாளிகள் மீதும், சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. திருச்சி சரகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் 17 குற்றவாளிகள் மீதும், தஞ்சாவூர் சரகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 குற்றவாளிகள் மீதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 குற்றவாளிகள் மீதும், தஞ்சை மாவட்டத்தில் 5 குற்றவாளிகள் மீதும், திருவாரூர் மாவட்டத்தில் 6 குற்றவாளிகள் மீதும் சரித்திர பதிவேடுகள் துவங்கப்பட்டுள்ளன.

போக்சோ குற்றவாளிகள் மீண்டும் ஒருமுறை குற்றம் செய்வதற்கான வாய்ப்பை முழுமையாக ஒழிக்க கூறிய எண்ணத்தில் சரித்திர பதிவேடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தையோ அவர்களைச் சார்ந்தவர்களையும் மிரட்டாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுவாக சரித்திர பதிவேடுகள் ரவுடிகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது மத்திய மண்டலத்தில் போக்சோ குற்றவாளிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட குற்றவாளிகள் காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருப்பது உறுதி செய்யப்படுவதன் மூலம் அவர்கள் மீண்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட முடியாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கையால் மேற்கண்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பையும் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது.

போக்சோ சரித்திர பதிவேடு குற்றவாளிகளை ரோந்து காவலர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களில் உள்ள காவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பாளர்கள். மேலும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகள் மீதான புலன் விசாரணையை துரிதப்படுத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து வாங்கி தருவதற்கான தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn