தொடர் மழை - சூரியூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

தொடர் மழை - சூரியூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், சூரியூர் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரபலமானது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல்களும் தயாராகி வந்தது.

Advertisement

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற‌ இருந்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக சூரியூரில் நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு, தொடர் மழையின் காரணமாக ஜனவரி 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு 20ம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 550 காளைகளும் 300 வீரர்களும் பங்கு பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த 4 விண்ணப்பங்கள் வந்த நிலையில் சூரியூரில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது. 

Advertisement