காவிரியில் 52 இடங்கள் ஆபத்தானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்

காவிரியில் 52 இடங்கள் ஆபத்தானவை - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேம்பட்ட மார்பக ஊடு கதிர், டிஜிட்டல் ஃப்ளோரோஸ்கோபி, நவீன முறை எக்ஸ்ரே கருவி உள்ளிட்ட 3.7 கோடி மதிப்பீட்டில் கருவிகளை நகராட்சி நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உடனிருந்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்..... காவேரியில் முக்கொம்பு மேலணைக்கு தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஜோடர்பாளையத்திலிருந்து மாயனூருக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கும் அதே வேளையில், காவிரியில் நீரோட்டம் அதிகரித்து காணப்படும். எனவே திருச்சி மாவட்ட மக்கள் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவை இன்றி ஆற்றில் இறங்க வேண்டாம். காவிரி கரையோரம் பகுதிகளில் 52 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீரின் மேற்பரப்பில் வேகமாக செல்வது தெரியாது. எனவே மக்கள் தவறுதலாக நினைத்து ஆற்றல் இறங்க கூடாது.

ஆழத்தில் நீர் போக்கு வேகமாக இருக்கும் என்பதால் நீச்சல் தெரிந்தவர்கள் கூட ஆற்றில் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்படும். எனவே பாதுகாப்பு கருதி மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.


#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO