கவுன்சிலர் வாகனத்தை களவாடிய நபர்-சிசிடிவி காட்சி

கவுன்சிலர் வாகனத்தை களவாடிய நபர்-சிசிடிவி காட்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ரெக்ஸ். இவரது அலுவலகம் மற்றும் வீடு திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் ரோடு பகுதியில் உள்ளது.

 நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் படிக்கட்டு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கவுன்சிலர் ரெக்ஸின இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

மர்ம நபர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இருசக்கர வாகன திருட்டு குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் குற்றவியல் காவல் நிலையத்தில் கவுன்சிலர் ரெக்ஸ் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision