திருச்சியில் யானை தந்தம், புள்ளிமான் தோல் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

திருச்சியில் யானை தந்தம், புள்ளிமான் தோல் பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது

சட்டவிரோதமாக யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக மத்திய வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் அறிவுரையின்படி, மாவட்ட வன அலுவலர் கிருத்திகா உத்தவின் பேரில், வன உயிரின பொருட்கள் சட்டவிரோத வணிகத்தை தடுக்க உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில்,

வனச்சரக அலுவலர் கோபிநாத், வனவர் பால சுப்பிரமணியன், துளசி மலை, வனக்காப்பாளர் சுகன்யா உள்பட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், எடமலைப்பட்டிபுதூர், சேதுராப்பட்டியில் கடந்த ஒரு வாரகாலமாக சந்தேகப்படும் இடங்களில் சோதனை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதர் (49) என்பவரது வீட்டில் சோதனை செய்ததில் 2.9 கிலோ எடையுள்ள யானை தந்தம் மற்றும் புள்ளிமான் தோல் ஆகியவை பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சட்டவிரோத விற்பனைக்கு உடந்தையாக இருந்த திருச்சி டவுன் ஸ்டேசன் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (65), திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் (51), சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த முரளி (60) ஆகியோர் கைது செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக திருச்சி வனச்சரக அலுவலகம் அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம், யானை தந்தம் யாரிடம் இருந்துபெறப்பட்டது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 பேரையும் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision