திருச்சி ஹைஎனர்ஜி ப்ராஜெக்ட் பேட்டரியில் எம்.பி ஆய்வு

திருச்சி ஹைஎனர்ஜி ப்ராஜெக்ட் பேட்டரியில் எம்.பி ஆய்வு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள திருச்சி ஹைஎனர்ஜி ப்ராஜெக்ட் பேட்டரி (HEPF) தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான பணிகளை தொல்.திருமாவளவன் பார்வையிட்டார். 

தொழிற்சாலையில் நடைபெறும் பணிகள் குறித்து தொழிற்சாலையின் தலைமை பொது மேலாளர் தியானோவர் தியாகி, பொது மேலாளர்கள் செல்லப்பாண்டி, சத்தியகாம் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இப்போது தொழிற்சாலை பணிபுரியும் ஊழியர்கள் தனியார் மூலமாக பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் பொழுது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். தொழிற்சங்கத்திற்குள் லைசன்ஸ் செல் உருவாக்கித் தரப்பட வேண்டும். மற்ற தொழிற்சக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அம்பேத்கர் தொழிலாளர் சங்கத்திற்கும் கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து HAPF அம்பேத்கர் தொழிற்சங்கத்தின் தலைவர் பாண்டியன் தலைமையில் HAPF தொழிற்சாலை நுழைவு வாயிலில் உள்ள அம்பேத்கர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் தொழிற்சங்கத்தின் 11ஆம் ஆண்டு துவக்க விழாவை பறைசாற்றும் விதமாக கல்வெட்டை திறந்து வைத்து, தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வின் போது தொழிற்சங்க நிர்வாகிகள் ரவி, பாண்டியன், இளங்கோ, இளங்கோ, இளங்கோவன், போலம்டோரா, தாமோதரன், பாஸ்கர், பரமசிவம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி - கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், சக்தி ஆற்றல் அரசு, முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புசெல்லம், சிறுத்தை குணா, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision