மத்திய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ரயில் ஊழியர் பலி
திருச்சி நவல்பட்டு அண்ணா நகர் ஓ.எப்.டி.காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (42). ரெயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் வசிக்கும் அவரது மைத்துனர் ராஜரீகன் நவல்பட்டு வந்திருந்தார்.
பிறகு இன்று மீண்டும் மைத்துனரை வழி அனுப்ப மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் அவரை அழைத்துக்கொண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது மத்திய பேருந்து நிலையம் உள்ளே இருசக்கர வாகனத்தில் மணிகண்டன் உள்ளே சென்ற பொழுது மதுரையில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்து மணிகண்டன் மீது உரசியது. இதில் நிலைதடுமாறி மணிகண்டன் வண்டியுடன் கீழே விழ அடுத்த நொடி பேருந்தின் பின் சக்கரம் மணிகண்டன் தலையின் மீது ஏறி நசங்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் மைத்துனர் ராஜரிகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து நடந்த போது மணிகண்டன் ஹெல்மெட் அணிந்திருந்தார். விபத்தில் மைத்துனரின் கையில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து கண்ட்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் அரசு பேருந்து மோதி ரெயில்வே ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision