திருச்சி சமயபுரத்தில் மொட்டை அடிக்கும் பணி நிறுத்தம் - பக்தர்கள் அவதி

திருச்சி சமயபுரத்தில் மொட்டை அடிக்கும் பணி நிறுத்தம் - பக்தர்கள் அவதி

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் முதன்மையான சக்தி ஸ்தலமாக விளங்குவது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில். இந்த மாரியம்மனை தரிசிக்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக அம்மனுக்கு முடிக்காணிக்கை செலுத்தும் பக்தர்கள் இக்கோயிலில் உள்ள முடிக்கணிக்கை மண்டபத்தில் இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நாவிதர்கள் என்று அழைக்கப்படும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 160க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் .

இந்த மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததால் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 7 பேரை கோயிலில் இணை ஆணையர் கல்யாணி தற்காலிக பணிநீக்கம் செய்தார்.

இதன் எதிரொலியாக இன்று மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து மொட்டை அடிக்கும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மொட்டை அடிக்கும் தொழிலாளர்களிடம் இணை ஆணையர் கல்யாணி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு  அரசு வேலைக்கு உரிய சம்பளம் வழங்குவதில்லை ஆன்லைன் டோக்கன்களில் முறைகேடுகள் நடந்து வருகிறது. அதே போல விழா காலங்களில் மொட்டை அடிக்கும் மண்டபத்தில் இருந்து தனிநபர்கள் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களை

தன்னிச்சையாக அழைத்து சென்று மொட்டை அடிக்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இணை ஆணையர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு , இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை .

ஆனால் முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் அன்பளிப்பு வாங்குவது எந்த வகையில் குற்றம் என எங்களை நீக்கினீர் எனக் கூறி போராட்டத்தினை கைவிட மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தினால் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் ஆக முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் செய்வதறியாது முடிகாணிக்கை மண்டபத்திலே நின்று வருகின்றனர் .