குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருச்சி பிஷப் கீப்பர் கல்லூரி ரோடு, வேளாண் விரிவாக்க மையம் அருகில் தடகள ஓட்ட பந்தய வீரர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் முதலியார் சத்திரத்தை சேர்ந்த எதிரி ஆரோக்கிய செல்வகுமார் மற்றும் காஜா பேட்டை பசுமடத்தை சேர்ந்த ஆரிப் கான் ஆகியோர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 விசாரணையில் திருச்சியில் ஆரோக்கிய செல்வகுமார் மீது திருச்சி மாநகரம் பாலக்காடு காவல் நிலையத்தில் இளைய சமூகத்தை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக இரண்டு வழக்குகளும் பலூன் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 850 பணத்தைப் பறித்து சென்றதாக ஒரு வழக்கும். மளிகை கடை உரிமையாளரிடம் சிகரெட் கேட்டு அறிவால் மற்றும் கட்டானால் தாக்கியதாக ஒரு வழக்கு உட்பட நான்கு வழக்குகளும் ஆரிப்கான் மீது நடந்து சென்ற ஓய்வு பெற்ற வணிகவரித்துறை உதவி ஆணையரை முகத்தில் தாக்கி கீழே தள்ளிவிட்டு செல்போனை பறித்து சென்றதாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பாலக்கரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவியர்களின் நான்கு கிராம் தங்க செயினை திருடியதாக ஒரு வழக்கும் மளிகை கடை போட்டு உடைத்து ரூபாய் ஆயிரம் மற்றும் சிகரெட் பாக்கெட்டைகளை திருடியதாக ஒரு வழக்கமாக மற்ற மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதை விசாரணையில் தெரியவந்தது எனவே ஆரோக்கிய செல்வகுமார் மற்றும் ஆரிப்கான் ஆகியவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதும் கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பரிப்பது திருட்டு போன்று குற்ற செயல்களில் ஈடுபாடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால் மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆணையிட்டுள்ளார் அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் மீது குண்டர் தடுப்பு சட்ட சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மேலும் திருச்சி மாநகரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.