திருச்சி - கரூர் ரயில் இரண்டு நாட்கள் ரத்து

திருச்சி - கரூர் ரயில் இரண்டு நாட்கள் ரத்து

சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூரில் இருந்து தினமும் மாலை 3:55 மணிக்கு திருச்சி வரும் கரூர் - திருச்சி

முன்பதிவுல்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் (26.04.2023) நாளை மறுநாளும் (28.04.2023) முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 

இதுபோல் மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து தினமும் மாலை 6:20 மணிக்கு கரூருக்கு புறப்படும் திருச்சி - கரூர் முன்பதிவு இல்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் (26.04.2023)

நாளை மறுநாளும் (28.04.2023) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது என்று திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn