தேசிய வன விலங்கு வார விழாவையொட்டி பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு மாநில, மாவட்ட அளவில் போட்டிகள்
தமிழக வனத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் வனவிலங்குகள் வார விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு வன விலங்கு வார விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் வன விலங்குகள் வன உயிரினங்கள் குறித்த குறும்படம் தயாரித்தல் மற்றும் வன உயிரினங்கள் தொடர்பான சின்னங்களை உருவாக்குதல் என இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அதேபோல் மாவட்ட அளவில் வன உயிரினங்கள் குறித்த கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். குறும்படம் மற்றும் சின்னங்களை உருவாக்கும் போட்டிகளும் அதேபோல் மாவட்ட அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கும் இணையதள முகவரியில் அனுப்பி வைக்கலாம்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி வெற்றி பெறும் முதல் மூன்று நபர்களுக்கு அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா, கர்நாடகத்தில் உள்ள ஜங்கிள் லாட்ஜஸ், தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றுக்கு சுற்றுலா சென்று வர ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn