பேருந்தில் மாணவிகள் மதுபானம் அருந்திய விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் பேட்டி
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாயொட்டி சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி... பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிகட்டில் தொங்கிக் கொண்டு வருவதற்கு அனுமதி அளித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறி உள்ளோம் என்றார். செங்கல்பட்டில் பேருந்தில் பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம் தொடர்பாக தனியார் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் மாதிரி பள்ளிகளின் தரம் உயர்த்த பேராசிரியர் அன்பழகன் பெயரில் முதல்கட்டமாக 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி பள்ளி ரூபாய் 6.89 கோடி செலவில் பள்ளி கட்டிடம் மற்றும் கூடுதல் வசதிகள் உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO