புதரா பூங்காவா கண்டுகொள்ளுமா மாநகராட்சி

புதரா பூங்காவா கண்டுகொள்ளுமா மாநகராட்சி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாநகரில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது திருச்சி மாநகராட்சி. குறிப்பாக நீதிமன்றம் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையோரம் நடைபாதை மேடை, உடற்பயிற்சி கூடம். முக்கிய சாலைகளின் நடுவே நீருற்று, திருச்சி பெயர் பலகை மற்றும் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் காஜாமலையில் உள்ள ஈவெரா கல்லூரி அருகில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக நடைபாதை, திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பூங்கா முழுவதும் புல், பூண்டு, செடிகள் அதிகளவு முளைத்துள்ளன. இங்கு விஷ பூச்சிகள், பாம்பு போன்றவை புதருக்குள் இருக்கிறது. மேலும் சிறுவர்கள் விளையாடும் பொருட்களை சேதமடைந்து காணப்படுகிறது. பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்கா பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் புதர்மண்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பூங்காவை சுற்றி அடைக்கப்பட்டுள்ள நடைபாதையில் தினமும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால் இந்த பூங்காவில் நிலைமையை பார்த்து சீரமைக்க முயற்சி செய்யலாமே என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமின்றி பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் இந்த சிறுவர் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu