தான்சானியா நாட்டில் இறந்தவரின் உடல் திருச்சி எம்பி முயற்சியில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல்.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரின் மகன் நிவாஷ் (42) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்க நாடான தான்சானியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 21 ம் தேதி இறந்துவிட்டதாகவும் அவரது உடலை திருச்சிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்து தரக்கோரி உறவினர்கள் மூலமாக கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அறிந்த நான் உடனடியாக தலைவர் வைகோ மூலமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை தொடர்பு கொண்ட போது, அமைச்சர் அமெரிக்காவில் இருப்பதாக தெரிவித்தார். தானும் தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிவாஷ் எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தவர். அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டுவர ஆவண செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.
கடந்த மாத இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருந்ததால் உடனடியாக அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக நேற்று (01.01.2025) காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய நடைமுறைகளை முடித்து விரைவாக உடலை வெளியே கொண்டு வரும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.
விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களும் அதற்கு உண்டான பணியை விரைவாக செய்து உடலை பெற்றுத் தந்தனர். நேற்று மாலை திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட நிவாஷின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திமுக திருச்சி மாவட்ட தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இன்று (02.01.2025) காலை அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது தந்தை, தாயார், சகோதரர், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.
தான்சானியா நாட்டிலேயே எரியூட்டி விடுகிறோம் என்று எங்களுக்கு தகவல் கிடைத்த பிறகு யாரை அணுகுவது? என்று திக்கு தெரியாமல் நின்ற பொழுது தங்களை அழைத்ததும் உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உடலைக் கொண்டு வந்தது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது. அதற்காக எங்கள் குடும்பத்தினர் அனைவரது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதே எமது கடமை. அதுவே எனக்கு மன நிறைவை தரும் பணி.
இன்று நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு டி. டி. சி. சேரன், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பெல். ராஜமாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் எல்லக்குடி அன்புராஜ், பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் ஆடிட்டர் வினோத், உறையூர் ஆசிரியர் முருகன், பொன்மலை எஃப்.எஸ்.எஸ் ஜெயசீலன், ஜங்ஷன் எஸ்.பி.செல்லத்துரை, ஸ்ரீரங்கம் சி. ராமமூர்த்தி, புத்தூர் கோபாலகிருஷ்ணன்,
திருவெறும்பூர் உ.சோமு, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டம் தெற்கு ஆரோக்கிய ரெக்ஸ், மணிகண்டம் வடக்கு ஏ. கே. அண்ணாதுரை, முன்னாள் மாநில இலக்கிய அணி துணை செயலாளர் ராஜன் இளமுருகு, ஜார்ஜ், மலர் செழியன், பெல்.ஜெயசீலன், ரயில்வே செழியன், ராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision