ரூபாய் 10 கோடி மதிப்பில் புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதியுடன் அமைக்கப்படும் - தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.‌

ரூபாய் 10 கோடி மதிப்பில் புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதியுடன்  அமைக்கப்படும் - தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.‌

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட்டில் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்று (03.02.2024) நிகழ்வு நிறைவு பெறும் நிலையில் நேற்று (02.02.2024) விழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த முதலமைச்சருக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சாரண, சாரணியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து மேடைக்கு வந்த முதலமைச்சர் சாரண, சாரணியருடன் செல்ஃபி எடுத்து கொண்டார். தொடர்ந்து வைர விழா மலரையும் வெளியிட்டார். 5 உலக சாதனைக்காக சான்றிதல் சாரண சாரணியர் இயக்க தேசிய முதன்மை ஆணையர் கே.கே.கண்டேல்வாலிடம் வழங்கப்பட்டது. விழாவை சிறப்பாக நடத்தியதை பாராட்டி முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் முதலமைச்சர் பேசியதாவது‌... இது மணப்பாறையா? இல்லை பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் பாசறையா என்று வியக்கும் வகையில் அமைந்துள்ளது. சாரண - சாரணியர் இயக்கத்தின் வைர விழா ஜம்புரி எனும் பெருந்திரளணி, இன்னும் சிறப்பாக கலைஞரின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்று வருகின்றது. பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டுக்கே பெரும் புகழை ஈட்டி தருகின்றது. இந்த புகழ் இந்திய புகழ். இன்னும் சொன்னால் உலகப்புகழ்.

சாரண - சாரணியர் இயக்கம் உலக அளவிலான இளைஞரின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலகப் பெரிய இயக்கங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தியாவில் 80 லட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 12 லட்சம் மாணவர்கள். 8 ல் ஒரு பங்கு நாம் இருக்கின்றோம். எதுவாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பங்கு என்பது அதிகமாக இருக்கும் என்பதை சாரண – சாரணியர் இயக்கத்திலும் உண்மையாக்கி உள்ளோம்.

இந்த சாரண - சாரணியர் இயக்கம் என்பது உடலினை, உள்ளத்தினை உறுதி செய்து, ஒழுக்கத்தை, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக உள்ளது. இந்த சீருடையுடன் உங்கள் அனைவரையும் பார்க்கும் பேர்து உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாளைய குடிமக்களான இளைய தலைமுறைக்கு பல்வேறு திறன் வளர்த்தலில் கவனம் செலுத்துகிறது. இந்த நேரத்தில் நான் சொல்வது. நாட்டுப் பற்று என்பது நிலத்தின் ( நாட்டின்) மீதான பற்றை கடந்து, மக்கள் மீதான பற்றாக இருக்க வேண்டும்.

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. இளைய தலைமுறையை இனிய தலைமுறையாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது. இராணுவ கட்டுக்கோப்பு இளம் தலைமுறையிடம் உருவாக்கிட வேண்டும் என்று தான் ராணுவ வீரர் பேடன் பவல் இந்த இயக்கத்தை உருவாக்கினார். சாரண - சாரணியர் இயக்கத்தின் இந்த பெருந்திரளனி ஒவ்வொரு நாட்டிலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்தியாவில் இதுவரை 18 பெருந்திரளணி, 5 சிறப்பு பெருந்திரளணியும் நடைபெற்றது.

2000 ம் ஆண்டு தமிழ்நாட்டில் சாரண - சாரணியர் இயக்க பொன்விழா நடைபெற்ற போது அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் நடத்தினார். இப்போது வைரவிழாவின் போது நான் முதல்வராக உள்ளேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர்தான். தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை உருவாக்கியது கலைஞர் தான். அவரின் நூற்றாண்டு விழாவை கொண்டாவது சரியானது தான்.

நாம் எல்லோரும் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் இந்தியர் என்ற புனிதத்தோடு ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதே போல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வந்து ஒன்று கூடி தங்களின் பண்பாட்டை வளர்த்து அன்பை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த நிகழ்வு வாய்ப்பை வழங்கி இருக்கின்றது. யாரும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றனாரின் முதுமொழிக்கு ஏற்ப சவுதி, மலோசியா, இலங்கை, நேபாளம், மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 6 நாட்களாக இங்கு ஒரே குடும்பமாக இருப்பது தான் நம் அன்பின் வலிமை. இங்கு இருக்கும் அனைவரும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் நாட்டின் கலாச்சாரம் உள்ளிட்டவைகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். நம்ம திராவிட மாடல் அரசால் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட 33 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண - சாரணியார்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான கூடாரங்கள், குடிநீர், சுகாதாரம், மருத்துவம் என அனைத்து போதுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒரே உணர்வோடு போராடியதால் தான் இந்திய நாடு விடுதலை பெற்றது. இந்த ஒற்றுமை உணர்வை எப்போதும் விட்டு விடக்கூடாது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்திருக்கும் அனைவரும் நாம் அனைவரும் மானுட தத்துத்தில் மனிதர்கள் என்ற பரந்த உள்ளமும் நமக்கு இருக்க வேண்டும், கூடாரங்கள் தனித்தனியாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும். இங்கிருந்து சென்ற போதும் உள்ளத்தால் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சாதன சாதனையை இயக்கத்தில் சேர்த்திடும் வகையில் மேலும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு சாரணர் இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதியுடன் ரூபாய் 10 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதைத் தொடர்ந்து சாரண சாரணியர் தங்களது மாநில கலாச்சார உடையுடன் சாகசம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடனமும் நடைபெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision