திருச்சி மாநகரில் நாளை (28.06.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாநகரில் நாளை (28.06.2024) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி (27.06.2024) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் விறகுபேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மரக்கடை வார்டு வார்டு எண்: 17,18,19, 20, 21, 30, 31 ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை (28.06.2024) ஒருநாள் இருக்காது.

(29.06.2024( அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision