கோவிலை இடிக்க முயற்சிக்கும் கல்லூரி நிர்வாகம் - பொதுமக்கள் எதிர்ப்பு

கோவிலை இடிக்க முயற்சிக்கும் கல்லூரி நிர்வாகம் - பொதுமக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், மாத்தூர், குண்டூர் காந்திநகர் பகுதியில் உள்ள "வினை தீர்க்கும் விநாயகர் கோவிலை" MIET நிர்வாகக் கல்லூரியின் செயல்பாடல் சுமார் 30 வருடங்களுக்கு மேல் வழிபட்டு வந்த கோவிலை MIET கல்லூரியின் நிர்வாகம் நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி இடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவருகிறது.

மேலும் நீதிமன்ற உத்தரவை நான் ஒரு வழக்கறிஞராக மதிப்பளிக்கிறேன். நீதிமன்ற உத்தரவை எந்தவித விமர்சனமும் செய்யவில்லை. மேலும் இந்தக் கோவிலை இடிக்க கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது தற்காலிகமாக வினை தீர்க்கும் விநாயகர் கோவிலை இடிக்க கூடாது என்று மிகவும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் அந்தப் பகுதியில் எவருக்கும் இடையூறு இல்லாமல் தான் கோவில் செயல்பட்டு வருகிறது. ஏன் MIET கல்லூரி நிர்வாகம் மட்டும் கோவிலை இடிக்க நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கியது புரியாத புதிராக உள்ளது. நான் கூறுவதை தவறாக நினைக்க வேண்டாம். MIET கல்லூரி நிர்வாகம் பொதுவாக செயல்படாமல், ஒருதலைப் பட்சமாக மத உணர்வுடன் செயல்படுகிறதா? என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அந்தக் கோவில் "பூங்காவில் பொதுவான இடத்தில் தான் செயல்பட்டு வருகிறது. MIETகல்லூரி நிர்வாகம் இடத்தில் செயல்படவில்லை. அப்படி இருக்கையில் ஏன் கல்லூரி நிர்வாகம் இந்தத் தவறான வழியில் செயல்பட்டது என்று புரியாத புதிராக உள்ளது.

ஆகையால் இது தொடர்பாக அந்தப் பகுதியின் பொதுமக்களுக்கு வினை தீர்க்கும் விநாயகர் கோவில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் பொதுமக்களின் நலம் கருதியும், MIET கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளின் நலன் கருதியும் அந்தக் கோவிலை அந்த பகுதியில் இருந்து அகற்றப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் MIET கல்லூரி நிர்வாகத்தை குறை கூறவில்லை, விமர்சிக்கவும் இல்லை. மேலும் எந்தவித மத உணர்வுடன் தூண்டுதலுக்கு எதிராகவும், விமர்சிக்கவும் இல்லை. பொதுவாக MIET கல்லூரி நிர்வாகத்தில் எல்லா பொது மக்களின் பிள்ளைகள் தான் படித்து பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு மாத்தூர் பகுதியில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலை இடிக்காமல் தொடர்ந்து அந்தப் பகுதியில் சிறப்பாக செயல்பட மிகவும் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த Diary No.46806/2024,வுடன் நகலையும் & பூங்காவில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் கோவிலின் போட்டோவையும் பதிவில் போடப்பட்டுள்ளது. இப்படிக்கு பொதுமக்கள் சார்பாகவும் பொதுநலன் கருதியும் T. Muthusamy M.B.A., BL.., T.ரவிச்சந்திரன் M.Sc.,B.Ed.,BL., வழக்கறிஞர், திருச்சி.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision