கொசு தொல்லையிலிருந்து பாதுகாக்க திருச்சி மாநகராட்சிக்கு வேண்டுகோள்

கொசு தொல்லையிலிருந்து பாதுகாக்க திருச்சி மாநகராட்சிக்கு வேண்டுகோள்

திருச்சி மாநகராட்சியில் 24 வது வார்டுக்குட்பட்டது உறையூர் ராமலிங்க நகர் பகுதி. இதில் சாக்கடை நீர் செல்வதற்கு தெருவோரமாக சிமெண்ட் கால்வாய் பாதைகள் கட்டி தரப்பட்டுள்ளது.

இந்த வார்டுல் இராமலிங்கநகர் ஐந்தாவது பிரதான சாலையில் மூகாம்பிகை குடியிருப்பு அருகே பல நாட்களாக சாக்கடைப்பாதையில் உள்ள சிமெண்ட் மூடிகள் திறந்து உள்ளதால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. தற்பொழுது மாநகராட்சி பகுதியில் அதிகமாக காய்ச்சல் பரவி வருவதால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக சிமெண்ட் மூடிகள் திறந்து கிடக்கும் இடத்தை மூட வேண்டும். சாக்கடை நீர் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுத்து தங்களை தொற்றுநோய் பரவும் அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision