ஆபத்தான நிலையில் பேருந்து நிழற்குடை - எம்எல்ஏ கவனிப்பாரா?
திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களின் மேலான பார்வைக்கு.... திருச்சி மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரம்பலுர், அரியலுர், கடலுர், துறையூர், கரூர், கோவை, திருப்பூர் போன்ற வெளியூர் பேருந்துகள் செல்லும் வழிதடங்கள் மற்றும் புலியூர், வியாழன் மேடு, எட்டரை, குழுமணி கிராம பகுதிகளுக்கு செல்லும் வழி தடங்களில் பேருந்து பயணிகள் காத்திருந்து செல்லும் நிழற்குடைகள் பல வருடங்களாக இல்லை.
இந்த நிலையில் பெரம்பலூர் வழிதடத்தில் உள்ள நிழற்குடைகள் ஆங்காங்கே உடைந்து தகரங்கள் வெளியே நீட்டி கொண்டும் பேருந்து பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலாக உள்ளது. மேற்கண்ட குறைபாடுகள் சம்பந்தமாக முதல்வரின் முகவரி மனுக்கள் துறைக்கு மனு அளிக்கபட்டு கடந்த மாதம் உதவி ஆணையர், வார்டு குழு அலுவலகம் 1 திருச்சி மாநகராட்சி இவ்வலுவலக கடித .ந.க.எண் இ.1 /2848/2024(வா.கு.அ. -1) நாள் 06.2024 மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்தகவலின் படி இச்சாலைகள் மாநில நெடுஞ்சாலை துறை வசம் வருவதால் நெடுஞ்சாலை துறை மூலம் இடம் ஒதுக்கீடு செய்து தரும் பட்சத்தில் நிழற்குடைகள் அமைத்து தரபடும் என்று தகவல் அளிக்கபட்டுள்ளது. மேற்கண்ட குறைபாடுகளை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இதனை தொடர்ந்து குறைபாடுகள் சம்பந்தமாக சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடம் பேசி இவ்விடங்களை ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் காக்க வேண்டுகிறோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். விழிப்புணர்வு பணியில் பெ.அய்யாரப்பன், சாலை பயனீட்டாளர் நலக்குழு, திருச்சி மாவட்டம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision