தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால் கொட்டப்பட்டு பெரியகுளம் பகுதி ஆக்கிரமிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால்  கொட்டப்பட்டு பெரியகுளம் பகுதி ஆக்கிரமிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ளது கொட்டப்பட்டு பெரியகுளம் .தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்க பணியால் கொட்டப்பட்டு பெரியகுளத்தில் நீர்த்தேக்க பகுதி குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த நேரத்தில் குளத்தை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கைக்கு எழுந்தது. அதற்கு தீர்வு காணப்படாத நிலையில் சாலை பணிக்காக அதில் கொட்டப்பட்ட மண்ணால் கரை பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. பருவ மழை காலத்தில் மீண்டும் வெள்ளம் வரும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

74 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் கொட்டப்பட்டு பெரியகுளம் .திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் குளக்கரை ஒட்டியும் ஆக்கிரமித்தும் உள்ளது. இந்த குளத்திலுள்ள நீரை பாசனத்திற்கு பயன்படுத்தப்பட முடியாமல் பாதைகள் அடைத்தும் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பிற்க்கு இக்குளம் முக்கிய பங்கு வகிக்கிறது.  தேசிய நெடுஞ்சாலையில் பிரிவு சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தை ரூ.69கோடியில் விரிவு படுத்துகிறது.

அண்ணா அறிவியல் கோளரங்கம் மற்றும் ஆவின் பால் பண்ணை அருகே கொட்டப்பட்டு பெரியகுளத்தில் ஒட்டி உள்ள காலி இடத்தை சமீபத்தில் மண் கொட்டி சமன் செய்தது. இந்நிலையில் சுமார் 200 மீட்டர் நீளமும் 20 அடி அகலம் கொண்ட குளத்தில் ஒரு பகுதியில் மண்ணால் மூடப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை போல் மழைக் காலங்களில் ஜே.கே நகர் மற்றும் ஆர்.எஸ்.புரம் தெருக்களில் வெள்ளம் ஏற்படும் என ஜே.கே நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெ.திருஞானம் தெரிவித்தார்.

சாலை பணியால் குளத்தின் பகுதியை குறைப்பது அறிவியல் பூர்வமற்றது. மேலும் குளத்தின் மதகுகளை ஆய்வு செய்து பலப்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் மாநில நெடுஞ்சாலை துறையில் இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் குளத்தின் கொள்ளளவு மாறவில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், குளத்தின் கரை பகுதிகள் சாலை பணியால் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் செங்குத்தான சுவர்கள் அதனுடைய எல்லையை நிர்ணயிக்க கட்டப் படும் என்றார்.

திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் அபிராமி கூறுகையில், வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று  ஆய்வு செய்வர்.அதனோடு  பொதுப்பணித்துறை,திருச்சி மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து இதற்கான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO