இப்படி பண்றீங்களேமா - வாகன ஓட்டிகள் பாதுகாக்கப்படுவார்களா?தீர்வு ஏற்படுமா?
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம், காவல் கட்டுப்பாட்டு அறை, நீதிமன்றம் இதை சுற்றி பிரதான சிக்னல் உள்ளது. அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்லக்கூடிய சாலையின் குறுக்கே சிக்னல் அருகில் சாக்கடை கால்வாய்க்கு சிமெண்ட் சிறிய பாலம் கட்டி மூடப்பட்டது.
முறையாக சாலைகளை சீரமைக்காமல் கற்கள் மற்றும் பெரிய ஜல்லிகள் மண்ணுடன் அந்த சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வயதானவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு வரும் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. வேகத்தடை போல் அந்த மண் கற்களும் அந்த இடத்தில் கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்ளாகின்றனர்.
ஐந்து நிமிடத்தில் அதனை ஜேசிபி வைத்து சுத்தம் செய்து விடலாம். ஆனால் அது செய்யாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மக்களுக்கு சாக்கடை வடிகால் பணிகளை அமைப்பது முக்கியம். அதே போல் சாலையில் வாகனத்தில் செல்வோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாப்பதும் அதைவிட முக்கியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn