கொரோனா கட்டுக்குள் வருவது ஆண்டவனுக்கு தான் தெரியும் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் 7 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்... கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சென்னையில் குழு அமைக்கப்பட்டுள்ளது அதேபோல திருச்சியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கு குழு அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் டிஆர்ஓ மற்றும் அவருக்கு கீழ் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவர்களை தொடர்பு கொண்டு எந்த உதவிகளையும் பெறலாம் என்ற ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் ரெம்டெசிவர் மருந்தானது மத்திய அரசிடமிருந்து நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் தமிழகத்திற்கு கொடுக்கப்படுகிறது. பெறுவது மிகக் குறைவாக இருப்பதால் அதை அதிகமாக பெற மத்திய அமைச்சரிடம் தமிழக முதல்வர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். திருச்சியில் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் ஏராளமானோருக்கு தேவைப்படுகிறது. இதனை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் 32 ஆயிரத்து 932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 827 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5795 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் சிகிச்சை பலனின்றி 308 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை விட அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் சிறப்பாக உள்ளது
நாங்கள் முதலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். எனவே தொகுதிகளுக்கு நாங்கள் தெரிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பல பெற்றோர்களிடம் இருந்து நானும் பல புகார்களை பெற்று வருகிறேன். குறிப்பாக ஒரு பேருந்து கட்டணம் வசூலிப்பதாகவும், பள்ளிக்கு வராத நிலையில் பள்ளி சீருடைக்கான கட்டணம் வசூலிப்பது போன்ற புகாரின் அடிப்படையில் விரைவில் அதுகுறித்து தனியார் பள்ளிகளோடு ஆலோசனை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd