தென்மண்டல நியோனாட்டாலஜி மாநாடு "சவுத் நியோகான் 2022"
NNF-தமிழ்நாடு பிரிவு மற்றும் திருச்சிராப்பள்ளியின் நியோனாட்டாலஜி அசோசியேஷன் இணைந்து நடத்தும் "சவுத் நியோகான் 2022, திருச்சி" (16ஆவது ஆண்டு தென் மண்டல நியோனாட்டாலஜி மாநாடு & தமிழ்நாடு மாநிலப் பிரிவு நியோனாட்டாலஜி மன்றத்தின் 19ஆவது ஆண்டு மாநில மாநாடு). திருச்சியில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் 25 வரை நடைபெற உள்ளது.
கொரோனா தொற்றுநோய்ச் சூழலுக்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட மகத்தான கல்வி மாநாடாக இது இருக்கும், மேலும் பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக, பச்சிளம் குழந்தை ஆரோக்கியத்தில் சமீபத்திய உலகளாவிய முன்னேற்றங்களில் பங்கேற்கவும், பகிர்ந்து கொள்ளவும் மற்றும் மேம்படுத்தவும் ஆர்வமுள்ள சுகாதார நிபுணர்களுக்கு இது உதவும்.
இந்த மாநாடு, "பச்சிளம் குழந்தைகளுக்கு தரமான சேவையைவழங்கி: அடைய முடியாதவர்களை அடைவது" என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதன் முக்கிய நோக்கம் ஒற்றை இலக்க பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் (NMR-ஐ அடைவதும் மற்றும் நிலைநிறுத்துவதும்". செப்டம்பர் 22 அன்று, ஆரம்ப/இரண்டாம்/மூன்றாம் நிலை பச்சிளம்குழந்தைப் பராமரிப்புக்காக திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறுமருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் 13 பயிலரங்குகள்நடத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவர்கள், PHCகள் மற்றும் ICDS ஆகியவற்றில் இருந்து சுமார் 500 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பல்வேறு பட்டறைகளில் பங்கேற்றனர்.
இந்த 13 பயிலரங்கில் முக்கியமானதாக, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து, சுமார் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு அவர்தம் கிராமங்களில் வசிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகளுக்கான சிறப்பு பயிற்சி (22.09.2022) அன்று வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் நோக்கம் "பச்சிளம் குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்படும் தன்மை மற்றும் இறப்பு விகிதத்தை குறைத்தல்","பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுத்துதல்" ஆகியவையாகும்.
பொதுவாக குழந்தை பிறந்தபின் 6 மாதங்கள் நோய்கள் ஏற்படக்கூடிய காலமாகும். இந்த பயிற்சியின் மூலமாக நோய் ஏற்படக்கூடியதை ஒருசில அறிகுறிகள் மூலமாக முன்னதாகவே கண்டறிந்து சரியான சிகிச்சையினை வழங்க வழிவகுக்கின்றது. மேலும் இந்த பயிற்சியின் மூலமாக குழந்தைகள் அபாயநிலைக்கு செல்வதை தவிர்க்கலாம். தாய்ப்பால் ஊட்டுதல், தொப்புள்கொடி பராமரிப்பு, காய்ச்சலை கையாளுதல், வயிற்றுப்போக்கு. சுவாசத் தொற்று, தீவிர பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பிற்கான பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடைமுறைகைளை ஊக்குவித்தல் உள்ளிட்ட விஷயங்கள் பங்கேற்ற அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சொல்லித்தரப்பட்டது.
இந்த மகத்தான அறிவியல் கூட்டத்தின் போது (செப்டம்பர் 23 முதல் 25 வரை), 1000 மருத்துவர்கள் பங்கேற்பார்கள். இதில் முக்கியமாக பச்சிளம் குழந்தைகளின் சிறப்பு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், முதுகலை பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளனர். இந்த மாநாட்டை திருச்சிராப்பள்ளி நியோனாட்டாலஜி அசோசியேஷன்" டாக்டர்.டி.செங்குட்டுவன் அமைப்புத் தலைவர்). டாக்டர்.செந்தில் குமார் (அமைப்புச் செயலாளர்), டாக்டர்.மாத்ருபூதம் (அமைப்புப் பொருளாளர்) தலைமையிலும் மற்றும் டாக்டர்.அரசர் சீராளர் (தலைவர், என்என்எப்-தமிழ்நாடு), டாக்டர் ஸ்ரீனிவாசன் (செயலாளர் என்என்எப் தமிழ்நாடு), டாக்டர் வைதீஸ்வரன் (பொருளாளர், என்என்எப் தமிழ்நாடு) ஆகியோரின் வழிகாட்டுதலின் படியும் நடத்துகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO