பொங்கல் கொடுத்து பெண் போலீசார் ப்ளார் விட்டதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் வாக்குமூலம்

பொங்கல் கொடுத்து பெண் போலீசார் ப்ளார் விட்டதாக நீதிபதியிடம் சவுக்கு சங்கர் வாக்குமூலம்

திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவில் 'சவுக்கு' சங்கர் மீது 5 சட்ட பிரிவுகளில் பதியப்பட்டுள்ள வழக்கிற்கு திருச்சி மகிளா உரிமையியல் நீதிமன்றத்திற்க்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்த பட்டார். 100 பெண் போலீஸ்சாரும், 20 ஆயுதப்படை பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சங்கரை திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்க நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு. அவரை போலீசார் அடித்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது வழக்கறிஞர் வைத்த வாதத்தில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சங்கருக்கு ஏதும் காயம் உள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய உத்தரவு. சங்கர் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்துள்ளார். தனது முக கண்ணாடியை கழட்ட சொல்லி பெண் போலீஸ் தன்னை அடித்ததாக நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரது வலது கையில் ஏற்கனவே முடிவு ஏற்பட்டுள்ளது. இடது கையை முறுக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் அவருக்கு பொங்கல் வாங்கி கொடுத்து அதன் பிறகு நடந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவை அனைத்திற்கும் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசார் நீதிபதி முன் மறுப்பு தெரிவித்ததால் வழக்கறிஞர்கள் இருதரப்பினரும் கூச்சலிட்டதால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision